ரத்தன் டாடாவே முதலீடு செய்த 'Start up' நிறுவனம்.. "இந்தியாலயே இதான் முதல் தடவ.." சபாஷ் போட வைத்த உதவியாளர்!!
முகப்பு > செய்திகள் > வணிகம்84 வயதாகும் ரத்தன் டாடா, சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கி இருந்தார். அந்த சமயத்தில் அந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் பல மடங்கு அதிகரித்திருந்தது.
வயதான காலத்தில் கூட, இன்றும் பலருக்கு இன்ஸபிரேஷனாக இருந்து வருகிறார் ரத்தன் டாடா. அனைவரிடமும் எளிமையாக பழகுவது உள்ளிட்ட பல விஷயங்கள் ரத்தன் டாடாவின் சிறப்பம்சங்கள.
அது மட்டுமில்லாமல், மறுபுறம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகளையும் ரத்தன் டாடா செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவர் முதலீடு செய்த நிறுவனம் தொடர்பான செய்தி, பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. 25 வயதே ஆகும் சாந்தனு நாயுடு என்ற இளைஞர், கடந்த 4 ஆண்டுகளாக ரத்தன் டாடாவிடம் உதவியாளராக இருந்து வருகிறார். அந்த வகையில், தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் சேவை வழங்க கூடிய 'GoodFellows' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை சாந்தனு தொடங்கி உள்ளார். இதில் தான், தற்போது ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு இப்படி ஒரு சேவை வழங்குவது இது தான் இந்தியாவில் முதல் நிறுவனம் என அறியப்படுகிறது. கடந்த ஆறு மாதமாக, தனிமையில் இருந்த சுமார் 20 மூத்த குடிமக்களுக்கு சேவையை வழங்கி வந்த 'GoodFellows' நிறுவனம், தற்போது இதனை முதற்கட்டமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரத்தன் டாடா, சாந்தனு உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்தி இருந்தார்.
மேலும், இந்த நிறுவனத்தின் செயல்பாடு என்பது, திறமையான இளைஞர்களை வேலைக்கு எடுத்து, மூத்த குடிமக்களுக்கு ஒரு நண்பன் அல்லது பேரக் குழந்தைகள் இடத்தில் இருந்து, அவர்களுடன் வாக்கிங் போவது, கேரம் போர்டு ஆடுவது, உள்ளிட்ட பல விஷயங்களில் ஈடுபட வேண்டும். அவர்கள் தனிமையில் இருப்பது போன்ற உணர்வை வர வைக்கக் கூடாது என்பது தான் இவர்களின் வேலை. அடுத்த கட்டமாக, புனே, சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த சேவையை விரிவு செய்ய திட்டம் போட்டுள்ளதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களை பார்த்துக் கொள்ளும் வகையில், நிறுவனம் ஒன்றை ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனு தொடங்கியுள்ள நிலையில், அதில் ரத்தன் டாடாவும் முதலீடு செய்துள்ளதாக வெளியான தகவல், பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்