H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு 'குறைவான' சம்பளம்...! பிரபல 'ஐடி' நிறுவனம் எடுத்த முடிவினால் ஊழியர்கள் அதிருப்தி...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

மற்ற ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் தங்களின் ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்துள்ளதாக Economic Policy Institute (EPI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு 'குறைவான' சம்பளம்...! பிரபல 'ஐடி' நிறுவனம் எடுத்த முடிவினால் ஊழியர்கள் அதிருப்தி...!

இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் டெக்னாலஜி வெளிநாடுகளில் பணிபுரியும் H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் 95 மில்லியன் டாலர் அளவுக்கு சம்பளத்தை குறைத்துள்ளது என எச்சிஎல் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கின் ஒரு பகுதியாக தற்போது பகுதியாக அமெரிக்க ஊழியர்களை காட்டிலும் H-1B விசா ஊழியர்களுக்கு எச்சிஎல் நிறுவனம் குறைவான சம்பளம் வழங்கியுள்ள தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Popular IT company HCL pays less to their employees

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வரும் இந்தியர்களுக்கு வருபவர்களுக்கு H-1B விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க அரசால் வழங்கப்படும் இந்த விசாவால் பல இந்தியர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அதோடு எச்சிஎல், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் H-1B விசா மூலம் ஏராளமான இந்திய ஊழியர்களை அமெரிக்காவில் பணியமர்த்தியுள்ளனர். ஆனால், அமெரிக்க ஊழியர்களை காட்டிலும் இந்திய H-1B விசா ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இந்திய ஊழியர்களுக்கு அதிருப்தி மனநிலையில் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்திய ஊழியர்கள் மட்டுமல்லாமல் சில அமெரிக்க ஊழியர்களும் குறைவான சம்பளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

HCL, LESS SALARY, IT COMPANY, சம்பளம், எச்சிஎல்

மற்ற செய்திகள்