‘எங்களுக்கு வேற வழி தெரியல’.. ‘கொரோனா’ கொடுத்த பெரிய அடி.. உலகின் மிக ‘பிரபல’ நிறுவனம் எடுத்த முடிவு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனாவால் தொடர்ந்து விற்பனை சரிந்து வருவதால் பிரபல கார் நிறுவனம் 10 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘எங்களுக்கு வேற வழி தெரியல’.. ‘கொரோனா’ கொடுத்த பெரிய அடி.. உலகின் மிக ‘பிரபல’ நிறுவனம் எடுத்த முடிவு..!

உலகின் மிகவும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ, ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கார் நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளன. பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனத்துறையில் விற்பனை இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா காரணமாக போதிய விற்பனை இல்லாததால் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், தானியங்கி காரை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்