'குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரபலம்'... 'டிராப்பிகானாவை விற்க முடிவு செய்த பெப்சி'... பின்னணி காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

டிராப்பிகானா ஜூஸ் பிராண்ட் பலதரப்பட்ட மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.

'குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரபலம்'... 'டிராப்பிகானாவை விற்க முடிவு செய்த பெப்சி'... பின்னணி காரணம் என்ன?

பெப்சி நிறுவனத்தில் பல பிராண்ட்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது டிராப்பிகானா உள்ளிட்ட ஜூஸ் பிராண்டுகள். இந்தப் பிரிவுகளை பெப்சிகோ நிறுவனம் விற்க முடிவெடுத்திருக்கிறது. பிரான்ஸைச் சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான பாய் பார்னர்ஸ் (PAI) நிறுவனத்திடம் இந்தப் பிரிவை 330 கோடி டாலருக்கு விற்கிறது பெப்சி.

இதற்குப் பதிலாக இரு நிறுவனங்களும் புதிதாக உருவாக்கும் நிறுவனத்தில் 39 சதவீத பங்குகள் பெப்சிகோவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த இணைப்பு முழுமையடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

PepsiCo to sell Tropicana, other juice brands

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் உணவு சார்ந்த பிரிவுகளில் மட்டுமே முதலீடு செய்யும். ஏற்கெனவே நெஸ்லேவுடன் இணைந்து ஐஸ்கிரீம் பிரிவில் முதலீடு செய்திருக்கிறது. இதற்கிடையே அதிக சர்க்கரை இருக்கும் பானங்களிலிருந்து வெளியேறி, குறைந்த கலோரி பானங்களில் தனது கவனத்தைச் செலுத்த பெப்சி முடிவு செய்துள்ளது.

PepsiCo to sell Tropicana, other juice brands

மேலும் டிராப்பிகானாவை விற்றாலும் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் இந்த விற்பனை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு மட்டுமே பொருந்தும் என பெப்சிகோ இந்தியா தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்