'Paytm யூஸ் பண்றவங்களுக்கு Happy நியூஸ்...' 'அட்டகாசமான சேவைகள்...' - தலைமை நிர்வாக அதிகாரி அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேலும் சுலபமாக்க Paytm நிறுவனம் தனது சேவையில் 'Aadhar enabled payment system' அறிமுகம் செய்ய போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த கொரோனா காலத்தில் மக்கள் நேரடி பணபரிமாற்றங்களை மேற்கொள்வதை விட டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல பில்லியன்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள ஆன்லைன் வணிக செயலியான Paytm தனது நெட்வொர்க்கில் 'Aadhar enabled payment system' அறிமுகம் செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் Paytm உபயோகிக்கும் பயனாளர்கள் ஆதார் உதவியுடன் தங்களது வங்கி சேவையை இன்னும் எளிதாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆதார் மூலம் பணம் பெறுதல், பரிமாற்றம் செய்தல், இருப்பு தொகை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கியமாக கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் இதன் மூலம் பெரிதும் பயனடைவார்கள் எனவும் paytm தெரிவித்துள்ளது. இந்த புதுவித சேவைகளை எளிதாக்கும் வகையில் paytm சுமார் 10,000 வணிக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.
Paytm செயலி பயன்படுத்தும் பயனர்கள், ஒரு மாதத்தில் சுமார் ரூ.50,000 அல்லது 10 பரிவர்த்தனைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனையின் போது ரூ.10,000 வரை எடுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் மூலம் தங்கள் வங்கிக் கணக்குகளை இயக்கும் சேவையையும் அமைத்துள்ளது. இதுகுறித்து கூறிய Paytm தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் குமார் குப்தா, 'டிஜிட்டல் வங்கி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கும், மில்லியன் கணக்கான எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்