வங்கி ஏடிஎம் கட்டணம் உயர்ந்தது! லிமிட்-க்கு மேல் எடுத்தாச்சுன்னா எவ்வளவு பிடிப்பாங்க?
முகப்பு > செய்திகள் > வணிகம்2022- ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்பட்ட ஏடிஎம் கட்டணத் தொகை அமலுக்கு வரும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.
தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ பேங்க் , ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் 2021 ஆம் ஆண்டே ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டண உயர்வை குறித்து அறிவித்திருந்தது.
கட்டண உயர்வு:
இந்த நிலையில் புத்தாண்டு பிறந்த இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகின்றன. இதற்கு முன் அறிவிக்கப்பட்ட இலவச ஏடிஎம் பயன்பாட்டை தாண்டி பயன்படுத்தும் ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு 21 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பல்வேறு வங்கிகளில் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வெவ்வேறு முறையில் இருக்கும். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனை வரம்புகளின் கீழ் பணம் எடுப்பது மட்டுமே ஆகும்.
எத்தனை தடவை இலவசமாக பணம் எடுக்கலாம்?
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் தங்களது சொந்த வங்கி ஏடிஎம்-களில் மாதம் 5 முறை இலவச ஏடிஎம் சேவையும், பெரு நகரங்களில் இருக்கும் மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 இலவச பரிமாற்றங்களும், பெரு நகரங்கள் அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேற்குறிப்பிட்ட பரிமாற்றங்களின் அளவை விட அதிக பரிமாற்றங்கள் செய்பவர்களுக்கு தான் ரு. 21 கட்டணம். ஹெச்டிஎஃப்சி வங்கியைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக 5 முறை இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் எப்படி?
அதோடு, சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மூன்று முறை மட்டும் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தவரையில், இலவச வரம்பைத் தாண்டில் ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் 21 ரூபாய் கட்டணம். ஆக்சிஸ் ஏடிஎம் அல்லது மற்ற ஏடிஎம்களில் பேலன்ஸ் செக்கிங் போன்ற சேவைகளுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்