“ட்விட்டரை என்கிட்ட கொடுங்க”... கோரிக்கை வச்ச பிரபல தொழிலதிபர்.. ஒரே வார்த்தையில் மஸ்க் போட்ட கமெண்ட்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ட்விட்டர் நிறுவனத்தை தான் வழிநடத்த அனுமதிக்கும்படி பிரபல தொழிலதிபர் ஒருவர் மஸ்க்கிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் டாப்பில் இருக்கிறார்.
முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் verified badge எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு பயனர்கள் மாதந்தோறும் 8 டாலர்கள் பணம் செலுத்தவேண்டும் என அறிவித்தார் மஸ்க். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுஒருபக்கம் என்றால், 50 சதவீத ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்தார் மஸ்க்.
இப்படி, தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் குறித்த பல்வேறு அறிவிப்புகளால் மஸ்க்கின் ட்விட்டர் பக்கம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் T - Mobile நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் லிகேரி ட்விட்டர் உரிமையாளரான மஸ்க்கிடம் புதிய கோரிக்கையை வைத்திருக்கிறார். அதாவது, ட்விட்டர் நிறுவனத்தின் தினசரி வணிகத்தை நிர்வகிப்பதையும், கண்டென்ட்டுகளை கட்டுப்படுத்துவதையும் நிறுத்துமாறும், அதற்கு பதிலாக, ட்விட்டரை இயக்க தன்னை அனுமதிக்குமாறும் மஸ்க்கை லிகேரி வலியுறுத்தியுள்ளார். மேலும் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தலாம் என்று ஜான் ஆலோசனை கூறியுள்ளார்.
ஜான் லெகேரியின் இந்த கோரிக்கைக்கு No என ஒற்றை வார்த்தையில் கமெண்ட் செய்திருக்கிறார் எலான் மஸ்க். இந்த ட்வீட்டை முன்னிட்டு நெட்டிசன்கள் தங்களது கருத்தை கமெண்டாக போட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்