‘இதுவரைக்கும் யாரும் இத பண்ணதில்ல’!.. ‘கொடுத்த வாக்கை நிறைவேத்திட்டேன்’.. முகேஷ் அம்பானி சந்தோஷத்துக்கு காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > வணிகம்ரிலையன்ஸ் நிறுவனம் முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ பங்குகளை விற்பனை செய்தல் மற்றும் உரிமை வெளியீடு ஆகியவற்றின் மூலம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து 1.68 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. இதன்மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிலையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களிடம், ‘2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிகர கடன் ஏதுமின்றி இருக்கும்’ என வாக்குறுதி அளித்திருந்தார். அந்த நிலையை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே நிறைவேற்றியிருப்பதாக முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர கடன் மதிப்பு 2020ம் ஆண்டு மார்ச் 31ம் படி 1,61,035 கோடியாக இருந்தது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து 1,15,693.95 கோடி அளவுக்கு முதலீட்டையும், உரிமை வெளியீட்டின் மூலம் 53,124 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை திரட்டியுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘உலகத்தில் இவ்வளவு குறிகிய காலத்தில் வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மூலதன நிதியை திரட்டியதில்லை. இந்த சம்பவம் இதற்கு முன்பு நடைபெற்றதும் இல்லை. உலகமே COVID19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது. மொத்த நிதி திரட்டல் 1.75 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறிய முகேஷ் அம்பானி, ‘கடந்த சில வாரங்களாக ஜியோவுடன் கூட்டு சேர்வதில் உலகளாவிய நிதி முதலீட்டாளர் சமூகத்தின் தனித்துவமான ஆர்வத்தால் நாங்கள் பெருமை அடைந்துள்ளோம். பங்குதாரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மரபணுவில் பதிந்த விஷயமாக இருக்கிறது. நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறிய பெருமை உள்ள சூழலில், ரிலையன்ஸ் அதன் பொற்காலத்தில் இன்னும் லட்சிய வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெறுவோம். நிறுவனர் திருபாய் அம்பானியின் கனவுகளை நிறைவேற்றுவோம். இந்தியாவின் வளர்ச்சியில் நம் பங்களிப்பை தொடர்ந்து அதிகரிப்போம்’ என முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனங்களான பேஸ்புக், சிலவர் லேக், விஸ்டா ஈக்யுடி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்ட்டிக், கேகேஆர், முபாடாலா, அடியா, டிபிஜி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 1,15,693.95 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் கடனே இல்லாத முதல் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Reliance raises over ₹ 168,818 Cr. in just 58 days.#MukeshAmbani #Reliance #Jio #DigitalIndia #JioDigitalLife #WithLoveFromJio #JioPlatforms pic.twitter.com/5iE4fbOLaQ
— Reliance Jio (@reliancejio) June 19, 2020
மற்ற செய்திகள்