‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாரத்திற்கு 4 நாட்களாக பணியாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்ததால் 40 சதவிகிதம் பணியின் தரம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..

வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்பதே பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் வழக்கம். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஜப்பானில் உள்ள தனது அலுவலம் ஒன்றில்  பணியாளர்கள் வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தாலே போதும் என அறிவித்தது. இதையடுத்து அனைத்து பணியாளர்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த முயற்சியால் தற்போது அந்த அலுவலகத்தில் பணியின் தரம் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுமுறை, பிடித்த நேரம் வேலை செய்யலாம் போன்ற சலுகைகளால் பணியாளர்கள் விரயம் செய்யும் நேரம் 25.4 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் கூடுதலாக மின் கட்டணம், பேப்பர் வேஸ்டேஜ் குறைவு போன்ற வேறு சில நன்மைகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தங்கள் பணி நேரத்தை தங்களே நிர்ணயிப்பது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நல்லது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

MICROSOFT, JAPAN, WORK, PRODUCTIVITY, IT, COMPANY, WEEK, DAYS