"'கொரோனா'வால பெரிய அடி வாங்கிட்டோம்"... '7000' பேரை வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனம்'... கலங்கி நிற்கும் 'ஊழியர்கள்'!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா தொற்று காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதிலிருந்து மீண்டு வர தங்களது ஊழியர்களை பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது.

"'கொரோனா'வால பெரிய அடி வாங்கிட்டோம்"... '7000' பேரை வீட்டுக்கு அனுப்பும் முன்னணி 'நிறுவனம்'... கலங்கி நிற்கும் 'ஊழியர்கள்'!!

இந்நிலையில், பிரிட்டிஷ் ஆடை மற்றும் சில்லறை விற்பனை நிறுவனமான 'மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்' நிறுவனம் கொரோனா நெருக்கடி காரணமாக, அடுத்த மூன்று மாதங்களில் 7,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் பெரும்பாலான ஆட்குறைப்புகள் அதன் வலுவான 60,000 கடை தளத் தொழிலாளர்களை பாதிக்கும் என கருதப்படுகிறது. ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை முடிவடைந்த காலாண்டில் 13 சதவீதம் வரை வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் கடைக்கு வந்து அனைவரும் ஆடைகளை வாங்க ஷாப்பிங் செய்வதை தவிர்த்து வருவதால் மற்ற ஆடை நிறுவனங்களை போல மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனத்தின் ஆன்லைன் ஆர்டர்களின் சதவீதமும் அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் கடை விற்பனை சுமார் 49 சதவீதம் வரை சரிவடைந்துள்ள நிலையில், ஆன்லைன் விற்பனை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் ஆடை மற்றும் வீடு பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டை விட இந்த முறை குறைந்துள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7000 பேரில் பலரை தன்னார்வமாக விலகிக் கொள்ளவும், முன்கூட்டியே ஓய்வு பெற்றுக் கொண்டு செல்லவும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

மற்ற செய்திகள்