"அடுத்த 'ரவுண்டு'க்கு 'ரெடி' ஆகுறோம்,,.. வேற வழி இல்லைங்க",,.. முன்னணி 'நிறுவனம்' அனுப்பிய 'மெயில்',,.. தகர்ந்து போன 'ஊழியர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா தொற்று காரணமாக, பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் காலகட்டத்தில் முன்னணி ஷிப்பிங் நிறுவனமான மேர்ஸ்க் (maersk), மறுசீரமைப்பின் காரணமாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஊழியர்களுக்கு மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், இனிமேல் தேவைப்படாத சில போலியான வேலைகள் மட்டும் பாதிக்கப்படலாம் என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வேறு எந்த தகவலும் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படவில்லை.
மேர்ஸ்க் ஷிப்பிங் நிறுவனத்தில் சுமார் 80,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வரும் நிலையில், இந்த மறுசீரமைப்பின் மூலம் சுமார் 26 ஆயிரம் முதல் 27 ஊழியர்கள் வரை பாதிக்கப்படலாம் என அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்