‘நாடு முழுவதும் 250 மாவட்டங்கள்’.. பொதுத்துறை வங்கிகளின் மெகா ‘லோன் மேளா’.. விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் லோன் மேளாவை நடத்துகின்றன.

‘நாடு முழுவதும் 250 மாவட்டங்கள்’.. பொதுத்துறை வங்கிகளின் மெகா ‘லோன் மேளா’.. விவரம் உள்ளே..!

வரயிருக்கும் பண்டிகை சீசனை தொடர்ந்து நாடு முழுவதும் லோன் மேளா எனப்படும் வங்கிகள் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (03.10.2019) முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் நான்கு நாட்கள் நடக்கும் இந்த லோன் மேளாவில் விவசாயம், வாகனம், கல்வி, வீடு, பெர்சனல் லோன் போன்ற அனைத்தும் விதமான லோன்களும் வழங்ப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த லோன் மேளாவில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பரோடா வங்கி, கூட்டுறவு வங்கிகள் ஆகிய வங்கிகள் பங்கெடுத்துள்ளன. மேலும் தனியார் வங்கிகள் சிலவும் இந்த லோன் மேளாவில் பங்கெடுத்துள்ளன. இதனை அடுத்து இரண்டாம் கட்ட லோன் மேளா அக்டோபர் 21 முதல் 25 ம் தேதி வரை சுமார் 150 மாவட்டங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பின்பற்றும் வகையில் டிஜிட்டல் வர்த்தகமாகவே லோன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

BANK, LOAN, LOANMELA