'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 19000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் பல்வேறு விமான நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதையடுத்து செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வரும் நிலையில், ஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருவதால் ஊழியர்களின் வேலை தப்பித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைஸும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், நிதி நிலையை சமாளிக்கவும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் அந்நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 25 மில்லியன் டாலர்களை கடந்த மார்ச் மாதம் நிதியாக வழங்கியுள்ளது. அதைவைத்து சூழலை சில மாதங்களாக சமாளித்துவந்த நிலையில், அந்த நிதி அடுத்த மாதத்துடன் முடியவுள்ளதால், நிலைமையை சரிகட்ட மேலும் 25 மில்லியன் நிதியுதவி வழங்கவேண்டும் என அந்நிறுவனம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்கு நிதியுதவி வழங்க அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுப்பதில் அரசுக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 19000 விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை அதற்குள் அரசு நிதி வழங்கினால் இந்த வேலையிழப்பு தவிர்க்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 19000 பேர் வேலை இழக்கலாம் என்ற சூழல் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்