அவங்க இல்லைன்னா என்ன நாங்க இருக்கோம்.. டிவிட்டர் சம்பவத்துக்கு பிறகு எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த இந்திய நிறுவனம்.. சம்பவம் இருக்கு போலயே..!
முகப்பு > செய்திகள் > வணிகம்எலான் மஸ்கை இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் கூ (Koo) நிறுவனத்தின் இணை நிறுவனர் அப்ரேமியா ராதா கிருஷ்ணா.
எலான் மஸ்க்
உலக பணக்காரர்களுள் ஒருவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களை நடத்திவருகிறார். விண்வெளி துறையில் இயங்கிவரும் ஸ்பேஸ் எக்ஸ், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்து வருகிறது. அதேபோல, டெஸ்லா உலக அளவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பல முன்னணி நிறுவனங்களில் மஸ்க் முதலீடும் செய்துவருகிறார். இதன் காரணமாக உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார் மஸ்க்.
சமீபத்தில் முன்னணி சமூக வலைத் தளமான டிவிட்டரின் 9.2% பங்குகளை வாங்கினார் மஸ்க். ஆனாலும், டிவிட்டர் நிர்வாக அதிகாரிகள் குழுவில் மஸ்க் இணையவில்லை என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இந்தியாவை சேர்ந்த சமூக வலை தளமான கூ தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு எலான் மஸ்க்-கிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
கூ நிறுவனம்
கடந்த 2020 ஆம் ஆண்டு அப்ரேமியா ராதாகிருஷ்ணா என்பவர் கூ நிறுவனத்தை துவங்கினார். தற்போது 200 மில்லியன் மக்கள் இந்த சமூக வலைத் தளத்தை பயன்படுத்திவருகிறார்கள். இந்தியா மட்டும் அல்லாது நைஜிரியாவிலும் இந்த நிறுவனம் இயங்கிவருகிறது. அந்த நாட்டில் டிவிட்டர் சேவை தடைபட்டதன் காரணமாக கூ அங்கே கால் பதித்திருக்கிறது.
அழைப்பு
இந்நிலையில், அப்ரேமியா தனது டிவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கை குறிப்பிட்டு," நாம் ஒருமுறை பேசலாம். நாங்கள் இளமையான மற்றும் துடிப்பான நிறுவனம். எங்களுடைய கனவுகள் பெரியவை. வருங்கால இந்தியாவின் மிகப்பெரிய சமூக வலை தளம் கூ தான். நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஜனநாயகப்பூர்வமான வெரிஃபிகேஷன் வசதி ஏற்கனவே கூ-வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
டிவிட்டரின் நிறுவன பங்குகளில் 9.2 சதவீதத்தை மஸ்க் வாங்கிய பிறகும் அந்த அந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இணையவில்லை என தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்திய நிறுவனமான கூ, மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்திருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
மற்ற செய்திகள்