'6,000 பேருக்கு வேலை, 60,000 பேருக்கு டிரெய்னிங்'... 'அதுவும் எங்க தெரியுமா?'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல குழுமம்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்சிட்டி குழுமம் 6,000 இளைஞர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாகவும், 60,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும்பாலான நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், செலவைக் குறைக்கும் பொருட்டு பணி நீக்கத்தை கையில் எடுத்துள்ளன. ஆனால் இதற்கிடையே சிட்டி குழுமம், ஆசியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 6,000 இளைஞர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாகவும், 24 வயதிற்குட்பட்ட 60,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பயிற்சியானது ஆசிய பிராந்தியத்தில் உள்ள சில்லறை நிறுவனங்கள் மற்றும் வணிக கல்லூரிகளில் இருக்கும் எனவும், 2023ஆம் ஆண்டளவில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்காக, சிட்டி குழும அறக்கட்டளை 35 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகள், பத்திர சேவைகள், அட்வைசரி, செக்யூரிட்டீஸ் சர்வீஸ் உள்ளிட்ட பல தளங்களில் இந்த புதிய வேலைவாய்ப்புகள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்