'1, 2 இல்ல 7 மாச சம்பளம் தரோம், ஆனா'... 'Layoff அறிவிப்பால் அதிர்ந்துபோயுள்ள ஊழியர்களுக்கு'... 'பிரபல நிறுவனம் கொடுக்கும் சூப்பர் ஆஃபர்!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

அக்சென்சர் நிறுவனம் பணிநீக்கம் குறித்து அறிவித்ததை அடுத்து மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

'1, 2 இல்ல 7 மாச சம்பளம் தரோம், ஆனா'... 'Layoff அறிவிப்பால் அதிர்ந்துபோயுள்ள ஊழியர்களுக்கு'... 'பிரபல நிறுவனம் கொடுக்கும் சூப்பர் ஆஃபர்!!!'...

உலகின் முன்னணி ஐடி கன்சல்டிங் மற்றும் ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் அக்சென்சர் முன்னதாக வெளியிட்ட பணிநீக்க அறிவிப்பு அந்நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் சக ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பணிநீக்கம் குறித்த அச்சத்திலுள்ள அக்சென்சர் நிறுவன ஊழியர்களுக்கு, அந்நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் நிர்வாகம் சுமார் 7 மாத சம்பளத்தை 'Severance Payout' ஆகக் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT Job Cuts Accenture Offers 7 Month Severance Payout To Employees

பொதுவாக நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யும் போது, 1, 2 அல்லது அதிகப்படியாக 3 மாதம், இல்லையெனில் நிறுவனத்தில் அந்த ஊழியர் பணியாற்றிய வருடத்திற்கு இணையான மாத சம்பளத்தை Severance Payout ஆக வழங்கும். ஆனால் தற்போது அக்சென்சர் நிறுவனம் 7 மாத Severance Payout வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்து வெளியேறும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அக்சென்சர் தெரிவித்துள்ளது. இந்த 7 மாத Severance Payout வழங்கப்படுவதில், 3 மாத நோட்டீஸ் பீரியடுக்கு பதிலான சம்பளம், கூடுதலாக 4 மாத சம்பளம் நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கு அக்சென்சர் கொடுக்கிறது.

IT Job Cuts Accenture Offers 7 Month Severance Payout To Employees

முன்னதாக கடந்த மாதம் அக்சென்சர் நிறுவனம் செலவுகளைக் குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறி, அனைத்து மட்டத்திலும் உள்ள அதன் ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது. உலகின் பல நாடுகளிலும் வர்த்தகம் செய்யும் அக்சென்சரில் சுமார் 5 லட்ச ஊழியர்கள் வேலை செய்துவரும் நிலையில், அதில் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதில் 5 சதவீதம் என்றால் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்கள் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்