ஊழியர்களுக்கு வரன் பார்த்து, திருமணத்துக்கு Increment-ம் கொடுக்கும் நிறுவனம்.. தமிழ்நாட்டுல இப்படி ஒரு கம்பெனியா?
முகப்பு > செய்திகள் > வணிகம்தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கிறது. மேலும் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஊதிய உயர்வையும் அளிக்கிறது இந்த நிறுவனம்.
Also Read | ஒற்றை பெயரால் வந்த குழப்பம்.. 10 நிமிஷத்துல 2 லட்சம் கோடியை இழந்த பணக்காரர்... பாவம் மனுஷன்..!
ஐடி நிறுவனம்
உலகம் முழுவதிலும் மிகப்பெரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்களது ஊழியர்களை தக்கவைக்க ஊதிய உயர்வு, விலை உயர்ந்த கார்களை வழங்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் வருடத்திற்கு இரண்டு முறை ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் இன்று தங்களது ஊழியர்களுக்கு மேட்ரிமோனி சேவைகளை வழங்கிவருவது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் திறமையான ஊழியர்களை தக்க வைக்கும் நோக்கில் மேட்ரிமோனி சேவைகளை தனது ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் ஊழியர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது சிறப்பு ஊதிய உயர்வு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என பல்வேறு சலுகைகளை தங்களது ஊழியர்களுக்கு வழங்குகிறது இந்த நிறுவனம்.
தற்போது 750 பேர் பணியாற்றும் இந்த நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு ஊழியர்களுக்கு தரப்படும் சலுகைகள் பிற வசதிகளும் காரணமாக நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தற்போது இங்கு பணிபுரியும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
ஊதிய உயர்வு
பொதுவாக திருமணத்திற்கு பிறகு பெண்கள் பணியில் இருந்து விலகிச் செல்வதை குறைக்கவும், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது இந்த நிறுவனம். வருடத்திற்கு இரண்டு முறை 6 - 8 சதவீதம் வரையில், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வையும் அளிக்கிறது இந்த புதுமையான நிறுவனம்.
திறமையான ஊழியர்களை தக்கவைக்க மதுரையை சேர்ந்த ஐடி நிறுவனம் மேட்ரிமோனி சேவை, திருமணத்திற்கு பிறகு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கிவருவது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்