'2 மடங்கு' சம்பளம்.. வருஷத்துக்கு '4 போனஸ்'.. இன்ப அதிர்ச்சி அளித்த.. 'பிரபல' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்பொருளாதார மந்தநிலையால் ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வந்தன. இதனால் ஊழியர்கள் பலரும் எப்போது தங்கள் வேலை பறிபோகுமோ? என்ற அச்சத்துடனேயே இருந்து வந்தனர்.
இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய 2-வது நிறுவனமான இன்போசிஸ் கேம்பஸ் தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 2 மடங்கு சம்பளம் அளிக்க முடிவு செய்துள்ளது. பவர் ப்ரோகிராமிஸ் என்று இத்திட்டத்துக்கு அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும்போதே திறன்வாய்ந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு 2 மடங்கு சம்பளம் அளிக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மாணவர்கள், நிறுவனம் இரண்டு தரப்பினருக்குமே நன்மை என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்த இன்போசிஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வளாகத் தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து, பயிற்சியின் முடிவில் 'கோடிங் டெஸ்ட்' அல்லது 'ஹேக்கத்தான்' டெஸ்டினை இன்போசிஸ் நடத்தும். அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த டபுள் மடங்கு சம்பளம் வழங்கப்படும்.
இவர்களின் திறன் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிக அளவிலான போனஸ், பதவி உயர்வும் வழங்கிட இன்போசிஸ் திட்டமிட்டு உள்ளது. 2-வதாக , இன்போசிஸ் பட்டியலிட்டுள்ள 32 திறன்களும் இருக்கும் பணியாளர்களுக்கு 'டிஜிட்டல் டேக்' எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு காலாண்டும் போனஸ் அளிக்கப்படவுள்ளது.
அதன்படி ஒவ்வொரு காலாண்டும் ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும். இந்த சலுகைகள் மட்டுமின்றி மேற்கண்ட முறைகளில் தேர்வு செய்யப்படும் ஊழியர்களை நிறுவனங்களின் முக்கிய புராஜெக்டில் சேர்க்கவும் இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது.