‘போடு ரகிட ரகிட’!.. 35,000 பேரை வேலைக்கு எடுக்கப்போகும் பிரபல ‘ஐடி’ கம்பெனி.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

நாடு முழுவதும் 35,000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளதாக பிரபல ஐடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘போடு ரகிட ரகிட’!.. 35,000 பேரை வேலைக்கு எடுக்கப்போகும் பிரபல ‘ஐடி’ கம்பெனி.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!

கொரோனா ஊரடங்கு காரணமாக பல துறைகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அதேசமயத்தில் பலரும் வேலையில் இருந்து விலகியும் வருகின்றனர். அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலையில் இருந்து வெளியேறுவோர், கடந்த மார்ச் காலாண்டில் 10.9 சதவீதமாகவும், ஜூன் காலாண்டில் விகிதம் 13.9 சதவீதமாகவும் உள்ளது.

Infosys to ramp up fresher hiring to 35,000

அதனால் ஊழியர்கள் தேவையை ஈடுகட்ட நாடு முழுவதும் 2021-2022 நிதியாண்டில் 35,000 கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுக்க இன்ஃபோசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புதிய பணியாளர்கள் சேர்க்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Infosys to ramp up fresher hiring to 35,000

இதுகுறித்து தெரிவித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ், ‘பணியாளர்களுடன் தொடர்ந்து உரையாடுவது என்பது முக்கியமானது. அவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இது தவிர பணியில் அடுத்த கட்ட வாய்ப்பு மற்றும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் இன்ஃபோசிஸ் வழங்கி வருகிறது.

Infosys to ramp up fresher hiring to 35,000

கடந்த நிதியாண்டில் 21,000 புதிய வேலைவாய்ப்புகளை இன்ஃபோசிஸ் வழங்கி இருக்கிறது. ஜூன் காலாண்டில் மட்டும் 8300 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 2.67 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் பெண் பணியாளர்களின் பங்கு 38.6 சதவீதமாக இருக்கிறது’ என பிரவீண் ராவ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பலரும் வேலை இழந்திருக்கும் சூழலில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்