'ஒரு லட்சம் ரெண்டு லட்சம் இல்ல...' ஒட்டுமொத்தமா 'அங்க' 35 லட்சம் பேர வேலைய விட்டு தூக்குறாங்க...! - கலக்கத்தில் ஊழியர்கள்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

கொரோனா வைரஸ் பரவலால் சுமார் 35 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என இந்தோனேசியா அரசு கணித்து வெளியிட்டுள்ளது.

'ஒரு லட்சம் ரெண்டு லட்சம் இல்ல...' ஒட்டுமொத்தமா 'அங்க' 35 லட்சம் பேர வேலைய விட்டு தூக்குறாங்க...! - கலக்கத்தில் ஊழியர்கள்...!

இந்தோனோஷியா அரசு கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் நாட்டின் பொருளாதாரம் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.49 சதவீதமாக சரிந்துள்ளததாகவும், இது 1998 ஆம் ஆண்டிற்குப் பின் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்துள்ள கடுமையான சரிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக இந்த நிகழ்வால் சுமார் 35 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தோனோஷியா நாட்டின் பொருளாதார ஏற்றம் என்பது விவசாயத்தைத் தவிர சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியுள்ளது, இது நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் உலகளவில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்