இந்தியன் பேங்க் வாடிக்கையாளரா நீங்க..? இன்னும் 2 நாளைக்கு இந்த சிக்கல்கள் எல்லாம் இருக்கும்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் வரும் 15ம் தேதி வரை கிடைக்காது என்று அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதால், இந்தியன் வங்கியின் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யுபிஐ மற்றும் ஏடிஎம் ஆகிய சேவைகள் 15-02-2021 தேதி வரை கிடைக்காது. மேலும், அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைப்புக்குப் பிறகு, இந்தியன் வங்கி இணைய முகவரி மூலம்தான் இன்டர்நெட் பேங்கிங் செய்ய முடியும். இந்த சேவையும் பிப்ரவரி 15ம் தேதி வரை கிடைக்காது.
முன்னதாக, 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு பொதுத்துறை வங்கிகளாகப் பெரும் இணைப்பு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இண்டியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டு வருகின்றன.
Thank you for your support during the amalgamation of Allahabad Bank into Indian Bank. It paved way for the smooth transition. We request you to kindly make a note of the important changes effective from 15th February 2021. Help us to serve you better.#IndianBank pic.twitter.com/EZNFwRPQ6l
— Indian Bank (@MyIndianBank) February 13, 2021
கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியில் இருந்து இந்த இணைப்பு அமலுக்கு வந்தது. பிப்ரவரி 15ம் தேதி காலை 9 மணி முதல் அலகாபாத் வங்கி முழுமையாக இந்தியன் வங்கியுடன் ஒருங்கிணைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்