இந்தியாவில் விரைவில் வருகிறது டிஜிட்டல் கரன்சி.. ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்..?
முகப்பு > செய்திகள் > வணிகம்டிஜிட்டல் கரன்சி வங்கி ரூபாய் என்ற வரையறையின் கீழ் கொண்டுவர ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடப்பு கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தனியார் கிரிப்டோகரன்சிகளை மக்கள் ஒரு பணமாக பயன்படுத்த முடியாது என சொல்லப்படுகிறது. மேலும் தனியாக கிரிப்டோகரன்சியை வாங்குவதோ, விற்பதோ அல்லது அதில் முதலீடு செய்வதோ அல்லது அதை வைத்து பொருள்கள் வாங்குவது தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதில் ஒரு சில கரன்சிகளுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என தெரிகிறது.
அதில் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு விலக்கு, வெளிநாடுகளில் அனுமதி அளிக்கப்பட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் வெளிநாட்டு பணம் என்ற அளவில் அனுமதி போன்ற சில விலக்குகள் மட்டும் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மசோதா தாக்கல் செய்யப்படும் பொழுது இதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் ஆர்பியை கொண்டு வர இருக்கும் டிஜிட்டல் கரன்சி ‘வங்கி ரூபாய்’ என்ற வரையறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை எளிதாக கண்காணிக்க முடியும் என சொல்லப்படுகிறது. இந்த டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை Central Bank Digital Currency (CBDC) எனப்படும் மத்திய வங்கி கண்காணிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வங்கி மூலம் நாம் நமது கையில் இருக்கும் ரூபாய்களை கொடுத்து டிஜிட்டல் கரன்சியாக மாற்ற முடியும். இதனால் பாதுகாப்பாகவும், வேகமாகவும், எளிதாகவும் பணத்தை அனுப்ப மற்றும் பெற முடியும் என்று ஆர்பிஐ தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது. ஆனாலும் பிட்காயினை இந்தியாவில் ஒரு கரன்சியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்