ஒரே மாசத்துல 'இத்தனை' லட்சம் பேருக்கு 'வேலை' போயிடுச்சா...? 'நிலைமை ரொம்ப மோசமா தான் இருக்கு...' - அதிர வைக்கும் 'சர்வே' முடிவு...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 32 லட்சம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு பண நெருக்கடியில் தள்ளப்பட்டனர்.
அதோடு பல்லாயிரக்கணக்கானோர் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்து அவதிப்பட்டு வந்தனர். தருபோது இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை கொரோனாவும் ஓய்ந்தப்பாடில்லை. மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
இந்நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, இந்தியாவில் கடந்த ஜூலை 2021-ஆம் ஆண்டு மட்டும் சுமார் 32 லட்சம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாத இறுதியில் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 7.97 கோடியாக இருந்ததாகவும், இது ஜூலை மாத இறுதியில் 7.64 கோடியாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகர்ப்புறங்களில் மட்டும் 26 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகளின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 24 லட்சமாகவும், விவசாயிகளின் எண்ணிக்கை 30 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்