எங்களால முடியல... 35,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்... பிரபல நிறுவனத்தின் முடிவால் 'அதிர்ச்சியில்' ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

35000 பேரை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எங்களால முடியல... 35,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்... பிரபல நிறுவனத்தின் முடிவால் 'அதிர்ச்சியில்' ஊழியர்கள்!

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி 35 ஆயிரம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட இந்த வங்கிக்கு சுமார் 2,35,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களில் தான் 35 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இவ்வங்கி முடிவு செய்துள்ளது.

மறுசீரமைப்பு மற்றும் செலவுகளை குறைக்கும் வகையில் 35 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் ஹெச்.எஸ்.பி.சி வங்கி அறிவித்தது. தற்போது கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் பெருத்த அடிவாங்கி வரும் சூழ்நிலையில், இந்த வேலை நீக்க நடவடிக்கையை ஹெச்.எஸ்.பி.சி கையில் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்த வங்கியில் வேலை செய்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் மெமோ ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த மெமோவில் எங்களால் வேலை இழப்புகளை காலவரையின்றி நிறுத்த முடியவில்லை. மேலும் இது எப்போது முடியும் என்ற கேள்வி தான் எங்களிடமும் உள்ளது. கடந்த பிப்ரவரியில் அறிவித்த அறிவிப்புகள் இன்று இன்னும் அவசியமானவை என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நோயல் க்வின் அதில் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனாவால் வாராக்கடன்கள் அதிகரிப்பு, பங்குகள் வீழ்ச்சி ஆகியவை காரணமாக ஹெச்.எஸ்.பி.சி வங்கி அதன் வருவாயில் 3 பில்லியன் டாலரை முதல் காலாண்டில் ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக, 4.5 பில்லியன் டாலர் செலவினைக் குறைப்பதற்காக ஹெச்எஸ்பிசி, கொரோனா காலத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தவறு என்று பணி நீக்கத்தினை ஒத்தி வைத்தது.

ஆனால் லாபத்தில் தொடர் வீழ்ச்சி, பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக இந்த பணி நீக்க நடவடிக்கையினை ஹெச்.எஸ்.பி.சி  மீண்டும் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மற்ற செய்திகள்