யார் அந்த பையன்? நான் அவர பார்க்கணும்.. ரத்தன் டாடாவை நெகிழ வைத்த காரியம்.. நல்ல மனசால பெரிய இடத்துக்கு போன இளைஞர்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

இளம் வயதிலேயே ரத்தன் டாடாவின் உதவியாளரக சாந்தனு நாயுடு பணி என்னும் இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இது பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் சாந்தனு நாயுடுவிற்கு எப்படி சாத்தியப்பட்டது என அனைவருக்கும் ஆச்சரியம்.

யார் அந்த பையன்? நான் அவர பார்க்கணும்.. ரத்தன் டாடாவை நெகிழ வைத்த காரியம்.. நல்ல மனசால பெரிய இடத்துக்கு போன இளைஞர்!

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம்:

2014-ஆம் ஆண்டு புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டத்தைப் பெற்ற சாந்தனு நாயுடு தொடக்கத்தில் டாடாவில் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார். ஒரு நாள் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது நடுரோட்டில் நாய் ஒன்று சாலை விபத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு வருத்தப்பட்டுள்ளார். இதற்கு மேல் இது போன்று நாய்கள் சாலை விபத்தில் இறக்கக் கூடாது என்று தோன்றியுள்ளது.

How Ratan Tata's assistant shantanu Naidu joined the mission

நாய்களுக்கு விபத்து ஏற்படாமல் தடுப்பது எப்படி?

தன்னுடன் ஆர்வமுள்ள சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ரிஃப்ளெக்டர் காலர் என்ற புதிய கண்டுபிடிப்பை உருவாக்கினார். இந்த காலர் மூலமாக ஓட்டுனர்கள் தூரத்தில் இருந்து நாயைக் கவனித்து விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். அடுத்த நாள் அவரும் அவருடைய நண்பர்களும் தெருநாய்களுக்கு காலர்களை கட்டி விட்டனர்.

How Ratan Tata's assistant shantanu Naidu joined the mission

ஆச்சரியத்தை உருவாக்கிய செய்தி:

இந்த நிலையில், அவர் உருவாக்கிய காலர் காரணமாக ஒரு நாய் விபத்திலிருந்து உயிரோடு காப்பாற்றப்பட்டதாகச் செய்தி அவரை வந்தடைந்தது. இந்த செய்தி அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியது. மேலும், டாடா குழுமத்தின் செய்திக் குறிப்பில் இந்த செய்தி இடம்பெற்றது. பிறகு, அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. இந்தத் தகவலைக் கேட்டறிந்த சிலர் நாய்களுக்கான காலர்களை செய்து தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்த நேரத்தில் அவரிடம் போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அவருடைய தந்தை ரத்தன் டாடாவுக்கு கடிதம் எழுதும்படி கூறினார். ஏனெனெனில், அவருக்கும் நாய்கள் மீது பிரியம் உள்ளதால் கண்டிப்பாக அவர் உதவுவார் என கூறியுள்ளார்.

How Ratan Tata's assistant shantanu Naidu joined the mission

சாந்தனு எழுதிய கடிதம்:

முதலில் சாந்தனு சற்று தயங்கினாலும் நாம் ஏன் அவரிடம் கேட்கக் கூடாது என்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இரு மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கடிதத்துக்கான பதில் கடிதம் ரத்தன் டாடாவிடமிருந்து வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் இளம் ஊழியரைச் சந்திக்க விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். பின்பு, சாந்தனு கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆனால், படித்து முடித்த கையேடு டாடா அறக்கட்டளைக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என்று உறுதியளித்தார்.

How Ratan Tata's assistant shantanu Naidu joined the mission

உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறீர்களா?

இந்த நிலையில் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அவருக்கு டாடாவிடம் இருந்து `என் அலுவலகத்தில் நிறைய வேலைகள் உள்ளது, எனவே நீங்கள் என் உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறீர்களா?' என்று அழைத்துள்ளார். அதன் பிறகே சாந்தனு ஜூலை 2018 முதல் ரத்தன் டாடாவின் அலுவலகத்தில் துணைப் பொது மேலாளராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அவரை எல்லாரும் பாஸ் என்று அழைப்பார்கள், ஆனால் நான் அவரை `மில்லினியல் டம்பில்டோர்' என்றே அழைக்க விரும்புகிறேன். அந்தப் பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக சாந்தனு நாயுடு ரத்தன் டாடாவைப் பற்றி கூறியுள்ளார்.

RATAN TATA, SHANTANU NAIDU, ரத்தன் டாடா, சாந்தனு நாயுடு

மற்ற செய்திகள்