'நாங்க இந்தியாவை விட்டு போறோம்...' 'இளைஞர்களின் கனவாக இருந்த...' - பிரபல ஸ்மார்ட் பைக் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > வணிகம்விற்பனை காரணங்களுக்காக இந்தியாவை விட்டு வெளியேறுகிறது பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி-டேவிட்சன்.
இளைஞர்களின் ஒரு கனவாகவும், இந்தியாவில் பிரபலமான மோட்டார் சைக்கிள் பிராண்டுகளில் ஒன்று ஹார்லி-டேவிட்சன்.
அமெரிக்க நிறுவனமான இது கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து விற்பனை சந்தைக்குள் அடியெடுத்து வைத்தது. தொடக்கத்தில் இருந்து இன்று வரை இளைஞர்கள் பட்டாளம் ஹார்லி-டேவிட்சன் பைக்கின் மீது சொல்லில் அடங்காத ஈர்ப்பினை கொண்டுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற நிறுவனம் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நம் நாட்டில் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து விற்பனை செய்வதற்காக அதன் தயாரிப்புகளின் பிஎஸ்-6 இணக்கமான மாடல்களையும் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலையை மூட முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் விற்பனை நலிவு, எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை ஆகிய காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது.
மேலும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் செய்து வந்த அரியானாவில் உள்ள பாவல் தொழிற்சாலையில் பைக் அசெம்பிள் செய்யும் பணியை வேறு சில வாகன தயாரிப்பாளர்களிடம் ஒப்படைக்க முயன்று வருகிறது.
ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தியை நிறுத்தினாலும், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசியா உள்ளிட்ட சுமார் 50 நாடுகளில் தனது விற்பனையை முடுக்கி விட தீர்மானித்துள்ளனர் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த தகவல்கள் ஹார்லி-டேவிட்சன் பைக் பிரியர்களுக்கு ஒரு பெருத்த இடியாக அமையும் எனவும் இணையங்களில் கருத்துக்கள் வலம் வருகிறது.
மற்ற செய்திகள்