“2 வருசமா வேலை கிடைக்கல”.. காலேஜ் வாசலில் டீக்கடை.. பட்டதாரி பெண் எடுத்த துணிச்சல் முடிவு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்வேலை கிடைக்காத நிலையில் கல்லூரி வாசல் முன்பு பட்டதாரி பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | “2 மாசமோ இல்ல, ஒன்றரை மாசமோ சீக்கிரம் இதை பண்ணுங்க”.. கோலிக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி..!
பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவர் 2 ஆண்டுகளுக்கு கல்லூரி பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் அவர் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. இதனிடையே அரசு பணிக்கான தேர்வுகளையும் எழுதியுள்ளார்.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கி கிடந்த இவர், டீக்கடை ஒன்று முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் மனதளராத பிரியங்கா, நண்பர்களிடம் 30 ஆயிரம் கடனாக பெற்று பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரிக்கு அருகே சிறிய டீக்கடை அமைத்துள்ளார்.
இதுகுறித்து கூறிய பிரியாங்கா, ‘நான் 2019-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தேன். ஆனால் 2 வருடங்களாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. அப்போதுதான் பிரஃபுல் பில்லோர் இடமிருந்து உத்வேகம் பெற்றேன். பல சாய்வாலாக்கள் உள்ளன. ஏன் ஒரு சாய்வாலி இருக்கக்கூடாது? என்று எனக்கு தோன்றியது. என் கடையில் மசாலா டீ, சாக்லேட் டீ போன்ற பல்வேறு வகையான டீ விற்கப்படுகிறது. கல்லூரி மாணவிகள் அதிகளவில் எனது கடைக்கு வருகின்றனர்’ என அவர் தெரிவித்துள்ளார்.
பிரியாங்காவை டீக்கடை வைக்க உத்வேகம் கொடுத்த பிரஃபுல் பில்லோர் (Prafull Billore) மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தனது எம்பிஏ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சாலையோரம் டீ விற்பவராக தனது எதிர்காலத்தை தொடங்கினார். இது நாளடைவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தனது 22 வயதில் ‘எம்பிஏ சாய்வாலா’ என்ற டீக்கடைக்கு முதலாளியாகி ஆண்டுக்கு ரூ.3 கோடி வருவாய் வரும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | ‘கல்யாணம் ஆகி 15 நாள்தான் ஆச்சு’.. நண்பன் பிறந்தநாளை கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்..!
மற்ற செய்திகள்