"கொரோனாவால ஊரே ஆடி போய் கெடக்குற நேரத்துலயும்"... 'ஐ.டி' ஊழியர்களுக்கு அடித்த 'ஜாக்பாட்'... திக்குமுக்காட வைத்த 'அறிவிப்பு'!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் வேலையிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்படுவதை சமாளிக்க வேண்டி, உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்திய பொருளாதாரத்தினை கண்காணிக்கும் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் ஜூலை மாத இறுதிப்படி 7.43 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் பொருளாதாரத்தை சீர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் அதே வேளையில், முன்னணி நிறுவனங்களும் புதிதாக ஆட்களை பணியமர்த்தவுள்ளது.
இதனையடுத்து பல முன்னணி நிறுவனங்கள், இந்தியாவில் சாஃப்ட்வேர் ஊழியர்களை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. கூகுள், அன்அகாடமி (unacademy), ஜேபி மோர்கன் (JP Morgan), பே பால் (Pay pal), இன்டெல் போன்ற பல முன்னணி நிறுவனங்கள், கர்நாடகா மற்றும் பெங்களூர் பகுதிகளில் புதிதாக சாஃப்ட்வேர் ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதே போல, மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஹைதராபாத்தில் புதிதாக ஆட்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. சோமாட்டோ, அமேசான், மெக்கன்ஸி போன்ற நிறுவனங்கள் ஹரியானா பகுதியில் புதிதாக வேலைவாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலகட்டங்களில், தங்களது பணிகளை இழந்து தவித்து வரும் ஐ.டி ஊழியர்களுக்கு இது போன்ற புதிய வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
மற்ற செய்திகள்