'உங்க கஷ்டம் புரியுது...' அதுக்காக தான் ரூ.1.2 லட்சம் போனஸ்...! - அதிரடியாக அறிவித்த 'பிரபல' நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பண்டிகைக்கான கூடுதல் போனசாக 1,600 டாலரை அறிவித்து அசத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது முதல் தனியார் நிறுவனங்கள் பலவும் Work from home செயல்முறையை பின்பற்றி வருகிறது. இதனால் அந்தந்த நிறுவனங்களுக்கும் செலவுகள் குறைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் இன்றளவும் ஐ.டி. நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதையே செயல்படுத்தி வருகிறது. பிரபல கூகிள் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல.
தற்போது வரை கூகிள் நிறுவனமும் பணியாளர்கள் அலுவலகத்திற்குத் திரும்பும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ள நிலையில் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் பண்டிகைக்கால போனசை அறிவித்துள்ளது.
அதன்படி கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் கூகுள் இந்த மாதம் 1,600 அமெரிக்க டாலர் அல்லது அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப அதற்கு சமமான மதிப்புடைய தொகையை வழங்கும் என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதாவது இந்திய மதிப்பின் படி ரூ.1.2 லட்சம் ஆகும்.
இதுக்குறித்து கூறிய அவர், 'கொரோனா வைரஸ் தொற்று மக்களை வீட்டிலிருந்து பணிபுரியும் நிலைக்கு தள்ளியுள்ளது. அவர்கள் என்னென்ன சிரமங்களை சந்திப்பார்கள் என்பதை உணர முடியும்.
இதனால் இந்த பண்டிகை களத்தில் எங்களின் ஊழியர்களுக்கான உதவித்தொகையுடன், இந்த நல்வாழ்வு போனஸும் கூடுதலாக வழங்குவது கூகுள் பணியாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமையும் என நினைக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும் வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் கூகுள் ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்