'உங்களுக்கு 3 option கொடுக்குறாம்... நீங்களே 'முடிவு' பண்ணலாம்... மொத்ததுல வேலையிட்டு போயிடுங்க'..!! மீள முடியாத நெருக்கடியால்... நொறுங்கிப்போன ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் முன்னணி விமான சேவைகள் நிறுவனமான GoAir-இன் மூத்த நிர்வாகிகள் சிலர், ஊதியம் இல்லாததால் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

'உங்களுக்கு 3 option கொடுக்குறாம்... நீங்களே 'முடிவு' பண்ணலாம்... மொத்ததுல வேலையிட்டு போயிடுங்க'..!! மீள முடியாத நெருக்கடியால்... நொறுங்கிப்போன ஊழியர்கள்!

கொரோனா வைரஸ் எதிரொலியால் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மோசமான நிலைக்குச் சென்றுள்ளன. ஐடி பெரு நிறுவனங்களைப் போலவே, விமான சேவை நிறுவனங்களும் பெரும் சேதத்தை சந்தித்துவருகின்றன.

அந்த வகையில், பிரபல விமான சேவைகள் நிறுவனமான GoAir, நிதி நெருக்கடியில் நிலைகுலைந்துபோயுள்ளது. சுமார் 6,700 ஊழியர்கள் வேலை செய்யும் அந்நிறுவனத்தில், 4,000 முதல் 4,500 ஊழியர்கள், ஊதியம் இல்லாத விடுப்பில் (leave without pay) அனுப்பப்பட்டுள்ளனர்.

GoAir நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 3 ஆப்ஷன்களை வழங்கியுள்ளது. தாமாக முன்வந்து ராஜினாமா செய்தல், வேலையைவிட்டு நீக்குதல் (termination) மற்றும் ஊதியம் இல்லாத காலவரையற்ற விடுப்பு. அதன் அடிப்படையில், GoAir-இன் மூத்த அதிகாரிகள் 6 பேர், ஊதியம் இல்லாத விடுப்பில் சென்றுள்ளனர்.

தற்போது GoAir நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கிட்டதட்ட இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், 60-70 விழுக்காடு ஊழியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் 30 விழுக்காடு பணியாளர்களுக்கும் சரியான சம்பளம் வழங்க முடியாத சூழலில் GoAir நிறுவனம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நீண்ட நாட்களாக விடுப்பில் இருந்த GoAir நிறுவனத்தின் secretary, international operations vice-presidents, cargo procurement, customer services, inflight services, corporate communication பிரிவு ஊழியர்கள், ஊதியம் இல்லாததால் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

மற்ற செய்திகள்