'கண்ணிமைக்கும் நேரத்தில் காலியான 73 ஆயிரம் கோடி'... 'அதிர்ந்துபோன மொத்த பிசினஸ் உலகம்'... அதானிக்கு என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தொழில் அதிபர் கவுதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது.

'கண்ணிமைக்கும் நேரத்தில் காலியான 73 ஆயிரம் கோடி'... 'அதிர்ந்துபோன மொத்த பிசினஸ் உலகம்'... அதானிக்கு என்ன நடந்தது?

இந்தியாவில் மிகப் பெரும் பணக்காரரான கவுதம் அதானி ஒரு மணி நேரத்தில் 73,250 கோடி இழப்பு ஏற்பட்டதால் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை இழக்கும் நிலையில் உள்ளார். ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார்.

Gautam Adani risks losing 2nd richest man in Asia

இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது. இந்நிலையில் அதானியின் கிரீன் எனர்ஜி டிரான்ஸ்மி‌ஷன், எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏ.பி.எம். எஸ். இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் ரூ.43,500 கோடி மதிப்பிலான கணக்குகளைத் தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.

இதனால் தேசிய பங்குச் சந்தையில் முந்தைய நாள் வர்த்தக முடிவில் 1601.60 ஆக இருந்த, இந்த பங்கின் விலை நேற்று 91 குறைந்து, 1,510.35-ஆகச் சரிந்தது. இதன் மூலம், அதானி சொத்து மதிப்பில் 73,250 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதானி சொத்து மதிப்பில் 1 மணிநேரத்தில் ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Gautam Adani risks losing 2nd richest man in Asia

இதன் காரணமாக அவர் ஆசியாவின் 2-வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கவுதம் அதானிக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்