டெய்லி 1,002 கோடி ரூபாய் வருமானம்...! 'அசுர' வளர்ச்சியில் இந்தியாவின் 2-வது பணக்காரர்...! - முதலிடத்தில் 'யாரு'னு தெரியுதா...?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலக பணக்காரர் பட்டியல் நேற்று (29-09-2021) வந்த நிலையில் இந்த முறை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்தியாவின் 2020-ஆம் ஆண்டுக்கான டாப்-10 பணக்காரர் பட்டியலை 'ஐ.ஐ.எஃப்.எல் வெல்த் ஹுரூன் இந்தியா' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

டெய்லி 1,002 கோடி ரூபாய் வருமானம்...! 'அசுர' வளர்ச்சியில் இந்தியாவின் 2-வது பணக்காரர்...! - முதலிடத்தில் 'யாரு'னு தெரியுதா...?

அதோடு இந்த குழு இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருப்பவர்களின் பட்டியலையும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில் 1000 கோடி சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

gautam adani Group earnings Rs 1,002 crore per day

2020-ஆம் ஆண்டில் 1007 தனி நபர்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர். இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட 167 பேர் அதிகரித்துள்ளனர். 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை.

gautam adani Group earnings Rs 1,002 crore per day

இந்நிலையில், இந்திய பணக்காரர் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியே இந்த ஆண்டும், ₹7,18,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

gautam adani Group earnings Rs 1,002 crore per day

அதையடுத்து 5,05,900கோடி ரூபாயுடன் கவுதம் அதானி 2-வது இடத்திலும், HCL இன் ஷிவ் நாடார் 2,36,600 கோடியுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதைதொடர்ந்து 4-ஆம் மற்றும் 5-ஆம் இடத்தில் எஸ்பி ஹிந்துஜா & பேமிலி மற்றும் எல்என் மிட்டல் உள்ளது. மேலும், சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவல்லா 1,63,700 கோடியுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின், வளர்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

ஆனால் இரண்டாம் இடத்தில் இருக்கும் கௌதம் அதானி மற்றும் குழுமத்தின் வளர்ச்சி, கடந்த ஆண்டை காட்டிலும் 261 சதவீதம் கூடுதலாக உள்ளது. நாள் ஒன்றுக்கு அதானி குழுமம் ஈட்டும் வருமானம் 1,002 கோடி ஆகும்.

மற்ற செய்திகள்