'இது என்ன மேஜிக்கா'... 'அசால்ட்டாக சேர்ந்த 1.18 லட்சம் கோடி'... அதானிக்கு எப்படி சாத்தியமானது?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

2021ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக சொத்து சேர்த்த பணக்காரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி முதலிடத்தில் இருக்கிறார்.

'இது என்ன மேஜிக்கா'... 'அசால்ட்டாக சேர்ந்த 1.18 லட்சம் கோடி'... அதானிக்கு எப்படி சாத்தியமானது?

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் தான் கவுதம் அதானி. புளூம்பெர்க் இண்டெக்ஸ் குறியீட்டின்படி, அவரது சொத்து மதிப்பு தற்போது50 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பீட்டில் ரூ.36.39 லட்சம் கோடி. இவர் இந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 16.2 பில்லியன் டாலரைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார். இந்திய ரூபாயில் சுமார் ரூ.1.18 லட்சம் கோடி.

இதன் மூலம் நடப்பாண்டில் சர்வதேச அளவில் அதிகம் சொத்து சேர்த்த பணக்காரர்களுக்கான பட்டியலில் கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். இதற்கிடையே உலகின் நம்பர் 1 பணக்காரராக உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்த ஆண்டில் 7.59 பில்லியன் டாலரை (ரூ.5.52 லட்சம் கோடி) இழந்திருக்கிறார். அதேபோல, உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் இந்த ஆண்டில் 10.3 பில்லியன் டாலரை (ரூ.75,000 கோடி) இழந்துள்ளார்.

Gautam Adani gets richer by $16 billion in 2021

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும், உலகின் 10ஆவது மிகப் பெரிய பணக்காரருமான ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த ஆண்டில் ரூ.5.58 லட்சத்தைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார். (8.05 பில்லியன் டாலர்). கவுதம் அதானியைப் பொறுத்தவரையில், அவரது மொத்த சொத்து மதிப்பில் அதானி கிரீன் எனெர்ஜி லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும் பாதிக்கு மேலான (27 பில்லியன் டாலர்) பங்குகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டு துறைகள் மட்டுமல்லாமல், நிலக்கரிச் சுரங்கம் போன்ற துறைகளிலும் இவர் அதிக லாபம் ஈட்டி வருகிறார்.

Gautam Adani gets richer by $16 billion in 2021

அதானியின் சொத்து மதிப்பு ஏற முக்கிய காரணம், அதானி குழும பங்குகளின் விலையில் ஏற்றம் மற்றும் அதானி கிரீன்ஸ்ல் கிடைத்த லாபமும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கூட காரணம். மின்சாரம், எரிவாயு, நிலக்கரி, துறைமுகம், விமான நிலையம் என அதானியின் வணிக தளம் விரிவடைந்து கொண்டே வருவதும் இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்