"இது 'திருவிழா' சீசன் பா,,.. புதுசா 70,000 பேருக்கு வேல,, அது மட்டுமில்லாம,,." 'அதிரடி' அறிவிப்புகளை வெளியிட்ட முன்னணி 'நிறுவனம்'!!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆன்லைன் வர்த்தக முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் (flipkart) நிறுவனத்தில், சீசன் விற்பனை காலத்தையொட்டி, நேரடியாக சுமார் 70,000 பேரையும், தற்காலிகமாக லட்சம் பேர் வரை பணியமர்த்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இது 'திருவிழா' சீசன் பா,,.. புதுசா 70,000 பேருக்கு வேல,, அது மட்டுமில்லாம,,." 'அதிரடி' அறிவிப்புகளை வெளியிட்ட முன்னணி 'நிறுவனம்'!!

பிளிப்கார்ட் நிறுவனம் ஆண்டு தோறும், 'Big Billion Days' என்ற பெயரில் 'மெகா' சலுகைகளுடன் விற்பனைகளை மேற்கொள்ளும். அந்த சமயங்களில் அதிகம் ஆர்டர்கள் வரும் நிலையில், ஆர்டர் செய்யும் பொருளை எடுத்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டி இந்த சீஸன் விற்பனையின் போது, ஆண்டுதோறும் புதிதாக தற்காலிக பணிகளை பிளிப்கார்ட் நிரப்பிக் கொள்ளும்.

அதே போல, இந்தாண்டும் புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்தவுள்ளது. முன்னதாக, நேரடியாக பணி அமர்த்தப்படவுள்ள நபர்களுக்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல, கடந்த ஆண்டு நடைபெற்ற விற்பனையை விட, இந்தாண்டு அதிகமாக 25 முதல் 30 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கவும் பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்