பிரபல 'ஸ்மார்ட் வாட்ச்' நிறுவனத்தை வாங்கிய கூகுள்...! - 'அவங்க எப்படி கொடுத்தாங்களோ...' - அதே மாதிரி நாங்களும் தருவோம்...!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த பிரபல நிறுவனத்தை வாங்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல 'ஸ்மார்ட் வாட்ச்' நிறுவனத்தை வாங்கிய கூகுள்...! - 'அவங்க எப்படி கொடுத்தாங்களோ...' - அதே மாதிரி நாங்களும் தருவோம்...!

கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதும் மக்கள் ஆரோக்கியத்தின் மீதும் பிட்னெஸ் என்ற சொல்லின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்துவருகின்றனர். அதற்குஏற்றார் போல பல கருவிகளும், பொருட்களும் விற்பனையில் அள்ளியது. அதுபோன்ற உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையிலான ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்து பிரபலமடைந்த நிறுவனம் FitBit.

மேலும் இந்த ஸ்மார்ட் வாட்சை கையில் கட்டிக்கொண்டால், உடலில் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு போன்றவற்றை ஃபிட்நஸ் ட்ராக்கர் தொழில்நுட்பம் உள்ளதால் ஆராய முடியும் எனவும், இந்த வாட்ச்கள் மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் குறையும் கலோரிகளையும் தெரிந்துகொள்ள முடியும்.

சமீபகலமாக ட்ரெண்டிங் மற்றும் விற்பனையில் உச்சத்தை அடைந்த FitBit நிறுவனத்தை வாங்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 15 கோடி ரூபாய்க்கு அந்நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கியது.

                                                    FitBit smart watch, the company acquired by Google

இதுகுறித்து அறிவித்துள்ள கூகுள் நிறுவனம், FitBit நிறுவனம் வழங்கியதை போலவே வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்குவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், விளம்பர நோக்கங்களுக்காக FitBit பயனர்களின் உடற்பயிற்சி மற்றும் சுகாதாரத் தரவு பயன்படுத்தப்படாது எனவும் கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மற்ற செய்திகள்