'உண்மையிலே என்ன தான் நடக்குது'?... 'கோபத்தின் உச்சிக்கே சென்ற வாடிக்கையாளர்கள்'... மீண்டும் மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை நீடித்த இந்த முடக்கத்தால் தகவல் தொடர்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட தங்கள் நிறுவன தளங்களில் தகவல் பரிவர்த்தனை தடை ஏற்பட்டதற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் வருத்தம் தெரிவித்தார். உலகம் முழுவதும் சுமார் ஒருகோடியே 6 லட்சம் பேர் தகவல் பரிமாற முடியாமல் பாதிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஃபேஸ்புக் நிறுவன பங்கு விலைகள் சரிந்ததால் ஜூகர் பெர்க்கிற்கு 600 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த தாக்கத்திலிருந்து ஃபேஸ்புக் இன்னும் வெளிவராத நிலையில், நேற்றிரவு மீண்டும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர் முடங்கியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "மனம் வருந்துகிறோம். கடந்த இரண்டு மணி நேரங்களாக எங்களின் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிலருக்குச் சிக்கல் ஏற்பட்டதை அறிந்தோம். உடனடியாக செயல்பட்டு அந்தச் சிக்கல் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. எல்லாம் இயல்புக்குத் திரும்பிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்