'எல்லாரும் கம்பெனி நஷ்டத்துல ரன் ஆயிட்டு இருக்கேன்னு...' 'ஃபீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல...' - மூக்கு மேல கை வைக்குற மாதிரி 'கூகுள்' சொன்ன 'அந்த' விஷயம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரு நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், நிறுவனங்களின் செலவுகளும் குறைந்து வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த சூழலில் எல்லா உலக நாடுகளும் ஊரடங்கை கடைபிடித்தது. அதோடு சிறு நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை ஊக்குவித்தன.
அதோடு இன்னும் ஒரு சில நாடுகளில் கொரோனா பரவல் அடங்காத சூழலில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த நிலையே தொடர்கிறது. முதலில் ஒரு சில இடர்பாடுகள் இருந்தாலும் பல நிறுவனங்கள் இதனால் லாபத்தினை சம்பாதித்து வருகிறது.
ஒரு நிறுவனம் இயங்குகிறது என்றால், ஒரு கட்டடத்தை வாடகைக்குப் பிடித்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வரவழைத்து, மின்சாரம், துப்புரவுப் பணியாளர்கள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, வரும் லாபத்தில் பெரும்பகுதியை செலவு செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.
இந்நிலையில் கூகுள் நிறுவனம், வீட்டிலிருந்தே ஊழியர்கள் பணியாற்றுவதால் கிட்டத்தட்ட 7406,21,50,000 ரூபாய் லாபம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் வராததால் இவ்வளவு லாபம் என்றாலும், கூகுள் நிறுவனத்துக்கு வரும் பல விளம்பரங்கள் குறைந்து விட்டதாகவும் கூகுள் நிறுவனம் கவலை அடைந்துள்ளது.
மற்ற செய்திகள்