வீட்ல இருந்து 'வொர்க்' பண்ணினது போதும்...! 'எல்லாரும் இனிமேல் ஆஃபீஸ் வந்துருங்க...' - அதிரடியாக அறிவித்த 'பிரபல ஐடி' நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்வொர்க் ஃப்ரம் ஹோம் போதும், ஊழியர்கள் இனி அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஒரு வருடக் காலமாக வீட்டில் இருந்து பணிபுரியலாம் என தெரிவித்திருந்தது, இந்த நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளால் இனிமேல் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என்ற அறிவிப்பை ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டின் காலாண்டில் புதிய அறிவிப்புகளையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய வேலை வாய்ப்பு, காலியாக இருக்கும் இடங்களை நிரப்புதல், போன்றவை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
முக்கியமாக வீடுகளிலிலிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெறும் மூன்று சதவீதஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்ததாகவும் ஹெச்.சி.எல். நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த நிதியாண்டில் இருந்து இதுவரைக்கும், 74 சதவீத ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், நடப்பு காலாண்டில் நூறு சதவீத ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்