'7 பெட்ரூம், 10 பாத்ரூம் இருக்கு...' யாருக்காவது என் 'வீடு' வேணுமா...? - 'வீட்டையே' விற்குற அளவுக்கு எலான் மஸ்க்-க்கு அப்படி 'என்ன' கஷ்டம்...?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலகின் பணக்காரன பட்டியலில் முதலிடன் இருக்கும் எலான் மஸ்க் சமூகவலைத்தளத்தில் இட்ட பதிவு டிரென்ட் ஆகி வருகிறது.

'7 பெட்ரூம், 10 பாத்ரூம் இருக்கு...' யாருக்காவது என் 'வீடு' வேணுமா...? - 'வீட்டையே' விற்குற அளவுக்கு எலான் மஸ்க்-க்கு அப்படி 'என்ன' கஷ்டம்...?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ப்ளூம்பெர்க் வெளியிட்ட உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் 225 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில்  இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தான் வசித்து வரும் 16,000 சதுர அடி நிலபரப்பில் அமைந்துள்ள மாளிகையை விற்க போவதாக அறிவித்துள்ளார்.

Elon Musk wants to sell his house in the United States.

அந்த மளிகையின் விலையை 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் குறைந்தது எலான் அதனை 31.99 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 241 கோடி ரூபாய்) விற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மஸ்க் தன்னுடைய ஒரு சில சொத்துக்களை விற்க உள்ளதாக கடந்த ஜூன் மாதமே அறிவித்திருந்த நிலையில், தற்போது தான் வாழும் வீட்டின் கட்டமைப்பு குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Elon Musk wants to sell his house in the United States.

அதில், 'கலிபோர்னியா ஹில்ஸ்பரோவில் 47 ஏக்கரில் உள்ள தனது வீட்டில், 7 படுக்கை அறைகளும் 10 குளியல் அறைகளும் உள்ளன.

இந்த கட்டிடம் கடந்த 1916-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும், அங்கு நூலகம், இசை அறை, முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட சமையலறை, நீச்சல் குளங்கள் ஆகியவை உள்ளன' என தெரிவித்துள்ளார்.

Elon Musk wants to sell his house in the United States.

மேலும், கலிபோர்னியாவில் இருக்கும் இந்த வீட்டை விற்க முக்கியமான காரணம் மஸ்க் உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைமையகத்தை சிலிக்கான் வேலியிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு மாற்றவிருக்கிறார்.

அதோடு, சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழிலாளர்களுக்கான செலவு அதிகமாக உள்ளதாகவும் செலவுகளை சமாளிக்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருவதாகவும் அதனை சரி செய்யும் விதமாகவே இந்த வீட்டை விற்பதாகவும் மஸ்க் கூறியிருந்தார்.

மற்ற செய்திகள்