நெருங்கும் ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் எடுத்த பரபர முடிவு.. மொத்த பங்கு சந்தையும் ஷாக் ஆகிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் நம்பர் 1 பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் 7.9 மில்லியன் பங்குகளை விற்பனை செய்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
நிரந்தர முடிவு
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் அதுகுறித்த விபரங்களை வெளியிடுமாறும் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் தொடர்பான தகவல்களை வழங்கவில்லை எனக் கூறி அந்நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக மஸ்க் தரப்பு அறிவித்தது. இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த விசாரணை அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எதிர்த்து எலான் மஸ்க்-ம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பங்குகள் விற்பனை
இந்நிலையில், தனது டெஸ்லா நிறுவனத்தின் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 7.9 மில்லியன் பங்குகளை மஸ்க் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாதத்தின் 5 முதல் 9 ஆம் தேதி வரையிலான நாட்களில் இந்த விற்பனை நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்த தகவல்கள் வெளிவந்து வைரலாக பேசப்பட்ட நிலையில், எலான் மஸ்க் தனது ட்வீட் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், "ட்விட்டர் டீலை முடிக்கும் பட்சத்தில் அவசரநிலையில் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்வதை தவிர்ப்பது முக்கியம்" என மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை அவர் விற்பனை செய்திருந்த நிலையில் தற்போது மேலும் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்திருப்பது பங்குச் சந்தை நிபுணர்களையே திகைப்படைய செய்திருக்கிறது.
Yes.
In the (hopefully unlikely) event that Twitter forces this deal to close *and* some equity partners don’t come through, it is important to avoid an emergency sale of Tesla stock.
— Elon Musk (@elonmusk) August 10, 2022
மற்ற செய்திகள்