'டிகிரி இல்லையேன்னு ஃபீல் பண்ணாதீங்க...' 'வேலை கிடைக்கலையேன்னு மன உளைச்சலில் இருப்பவர்களுக்காக...' - எலான் மஸ்க் வெளியிட்ட 'சில்' நியூஸ்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்ட ஒரு டிவிட் ஒன்று டிரெண்டிங் ஆக மாறியுள்ளது.
போக்க சிக்கா நகரை ஸ்டார்பேஸ்ஸாக மாற்றிய அவர், தற்போது ஆஸ்டின் நகரில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலை 2022-ம் ஆண்டுக்குள் 10,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு டிகிரி தேவையில்லை என்றும், பள்ளிக்கல்வியில் உயர்கல்வியை நிறைவு செய்திருந்தால் போதும் என அறிவித்துள்ளார்.
வெறும் பள்ளிப்படிப்பை மட்டும் நிறைவு செய்த மாணவர்கள் கூட எலான் மஸ்கின் ஆஸ்டின் தொழிற்சாலையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசைன், கட்டுமானம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் டெஸ்லா நிறுவனத்தில் ஜிகா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. பிரமாண்டமான கார் உற்பத்தி தொழிற்சாலையாக உருவாக்கப்படும் அதில் பலதரப்பட்ட கார்களும் தயாரிக்கப்பட உள்ளதாம்.
சென்ற ஜூலை மாதம் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பில் ஆஸ்டின் நகரத்தில் மிக வேகமாக புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். டெஸ்லா நிறுவனத்தில் ஆண்டுக்கு 5,000 பேருக்கு வேலை தரப்படும் என உறுதியளித்திருந்தார், இந்த தொழிற்சாலை பணிகள் நிறைவடைந்து, 10,000 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டால், டெஸ்லாவின் வாக்குறுதியை விட ஒருமடங்கு அதிகமானோரை வேலைக்கு சேர்த்த பெருமை டெஸ்லாவிற்கு கிடைக்கும்.
இது வேலைக்கும் முயற்சிக்கும் இஞ்சினியரிங் மாணவர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்