டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இவ்வளவு பிட்காயின் வச்சிருக்காரா? வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்
முகப்பு > செய்திகள் > வணிகம்டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் 2021ஆம் ஆண்டு முடிவில் சுமார் 2 பில்லியன் டாலர் பிட்காயின்களை வைத்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர். பிரபலமானவர். அவர் குறித்து தினமும் ஒரு செய்தியாவது வந்துவிடும். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் எலான் மஸ்க்கிற்கு இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.
எலான் மஸ்க் பிட்காயின் குறித்து வெளியிட்ட சில தகவல்களால் அதன் மதிப்பு கூடவும், செய்யும் குறையும் செய்யும். அதோடு US செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் (SEC) அதிகாரப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ததுள்ளது.
கிரிப்டோகரன்சிகளில் ஏற்பட்ட சந்தை விழ்ச்சி:
அதில், கடந்த ஆண்டு இறுதிக்குள் 1.5 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 11,200 கோடி) பிட்காயின்களாக வைத்திருந்ததாக தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்ற ஆண்டு கிரிப்டோகரன்சிகளில் ஏற்பட்ட சந்தை விழ்ச்சிகளால் டெஸ்லாவின் பிட்காயின்களின் மதிப்பு 101 மில்லியன் டாலர்களாக (தோராயமாக ரூ. 755 கோடி) குறைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.
டோஜ் காயின் மூலம் மக்கள் வாங்கி கொள்ளலாம்:
கிரிப்டோகரன்சியின் மிகப்பெரிய ஆதரவாளராகவே எலான் மஸ்க் இருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு மீம் காயினான டோஜ் காயினுக்கும் அவருடைய ஆதரவைத் தொடர்ந்து அளித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்த வருடம் டிசம்பர் மாதம் டெஸ்லா மின்சாரக் கார்களை டோஜ் காயின் மூலம் மக்கள் வாங்கி கொள்ளலாம் எனவும் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் எதிர்காலத்திற்கும், வணிக சூழ்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் அவசர நிலைகளுக்கு தேவைப்படும் நிதிகளுக்காகவே இம்மாதிரியான டிஜிட்டல் சொத்துக்களை வைத்திருக்கிறது எனக் கூறியதாக அமெரிக்க செக்யூரிட்டிஸ் கமிஷன் கூறியுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில், டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனம் பிட்காயினை அதன் கட்டண விருப்பமாக பட்டியலில் சேர்த்திருந்தது. ஆனால் கிரிப்டோகரன்சியின் மைனிங்குடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் மாசுபாடுகளையும் மேற்கோள் காட்டி அந்த திட்டத்தை கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்