"நான் சேலஞ்ச் பண்றேன்.. அவர் தயாரா?".. ட்விட்டர் CEO-க்கு சவால் விட்ட எலான் மஸ்க்.. அப்படி என்ன ஆச்சு.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வாலை பொது விவாதத்துக்கு அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | எலான் மஸ்க்கின் புதிய பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க.. மொத்த அமெரிக்காவும் ஷாக் ஆகிடுச்சு..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
போலி கணக்குகள்
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் டீலை தற்காலிகமாக நிறுத்துவதாக மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கை விடுவதாக மஸ்க் தரப்பு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த விசாரணை அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எதிர்த்து எலான் மஸ்க்-ம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
சவால்
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் CEO பராக் அகர்வாலை சவாலுக்கு அழைத்திருக்கிறார் எலான். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்,"ட்விட்டரில் இருக்கும் போட் (Bot) களின் அளவு குறித்து பொதுவெளியில் விவாதம் நடத்த பராக் அகர்வாலுக்கு சவால் விடுக்கிறேன். ட்விட்டரில் 5 சதவீதத்துக்கும் குறைவாக போலி கணக்குகள் இல்லை என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்