புயல் வேகமா-ல இருக்கு.. எலான் மஸ்க் போட்ட ஒரே ட்வீட்.. இது எப்படி சாத்தியம்னு திகைச்சுப் போன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலக பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்னர் தனது நிறுவனம் தயாரித்த வாசனை திரவியத்தை சந்தையில் களமிறக்கினார். இந்நிலையில், அதுகுறித்து அவர் தற்போது போட்டிருக்கும் ஒரு ட்வீட் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
வாசனை திரவியம்
இந்நிலையில் 'Burnt Hair' எனும் பெயரில் வாசனை திரவிய தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளார் மஸ்க். கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தனது வாசனை திரவியத்தை சந்தையில் களமிறக்கினார் மஸ்க். அதைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தனது பயோவை வாசனை 'திரவிய விற்பனையாளர்' (Perfume Salesman) எனவும் மாற்றியிருந்தார். இந்த Burnt Hair வாசனை திரவியத்தின் விலை ஒரு பாட்டிலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8,400 ரூபாய்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து பாட்டில்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார் மஸ்க். மேலும், இந்த பாட்டிலை 30 ஆயிரம் பேர் ஆர்டர் செய்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான பாட்டில்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெலிவரி செய்யப்படும் என மஸ்க் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வாசனை திரவியம் 28,700 பாட்டில்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், 1300 பாட்டில்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் மஸ்க் ட்வீட் செய்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் போட்ட மற்றொரு ட்வீட்டில் அனைத்து பாட்டில்களும் விற்பனையாகிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் மஸ்க். விற்பனைக்கு வந்து சில நாட்களில் அனைத்து பாட்டில்களும் விற்பனையாகிவிட்டதாக மஸ்க் போட்ட ட்வீட் உலக அளவில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
And … sold out!
— Elon Musk (@elonmusk) October 19, 2022
மற்ற செய்திகள்