கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இப்படி ஒரு சோகமான சாதனையா.?.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் உலக சாதனை படைத்திருப்பதாக கின்னஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்.. இப்படி ஒரு சோகமான சாதனையா.?.. முழு விபரம்..!

Also Read | ரோஹித் ஷர்மாவை நேர்ல பார்த்ததும் கண்கலங்கிய குட்டி ரசிகர்.. கன்னத்தை கிள்ளி சமாதானப்படுத்திய ரோஹித்.. க்யூட் வீடியோ..!

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க். இதனிடையே, வாசனை திரவிய தொழிலும் அவர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Elon Musk breaks world record for huge loss of personal fortune

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ்க்கு பிறகு தனிப்பட்ட சொத்து மதிப்பில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட இரண்டாவது நபராக கருதப்படுபவர் மஸ்க். இவர் 2021 ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார். தொடர்ந்து உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்தார் மஸ்க். ஆனால், அதே ஆண்டு நவம்பர் துவங்கி அவருடைய சொத்து மதிப்பு குறைய துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நவம்பர் 2021 இல் $320 பில்லியனில் இருந்து ஜனவரி 2023 வரை $137 பில்லியனாகக் குறைந்துள்ளது. இந்த இழப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பட்ட சொத்து இழப்புக்கான உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.

Elon Musk breaks world record for huge loss of personal fortune

இதுகுறித்து கின்னஸ் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில்,"துல்லியமான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும், மஸ்கின் மொத்த இழப்பு 2000 இல் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் என்பவருடைய (58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு) முந்தைய சாதனையை விட அதிகமாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஃபோர்ப்ஸ் இதழின்படி உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்திலும் எலான் மஸ்க் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Also Read | 500 மில்லியன்-ல ஒருத்தருக்கு தான் இந்த மாதிரி நடக்கும்.. மருத்துவ உலகையே ஆச்சர்யப்படுத்திய கர்ப்பிணிப்பெண்..!

ELON MUSK, WORLD RECORD, ELON MUSK BREAKS WORLD RECORD, PERSONAL FORTUNE

மற்ற செய்திகள்