Darbar USA

டிரோன் வைத்திருப்பவர்களுக்கு... விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை... வருகிறது புதிய கட்டுப்பாடு!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆளில்லா சிறிய ரக விமானங்களை (டிரோன் - Drone) அதன் உரிமையாளா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் அரசிடம் பதிவு செய்ய வேண்டுமென்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.

டிரோன் வைத்திருப்பவர்களுக்கு... விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை... வருகிறது புதிய கட்டுப்பாடு!

ஈரானின் முக்கிய படைப் பிரிவுத் தலைவா் காஸ்சிம் சுலைமானி, கடந்த 3-ம் தேதி அமெரிக்கா ராணுவத்தின் ட்ரோன்  தாக்குதல் மூலம், ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் கொல்லப்பட்டார். இதையடுத்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிகளை மீறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில், அவ்வபோது ஆளில்லா விமானங்கள் இயக்கப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இதன் உரிமையாளர்கள், அதனை இயக்குபவர்கள் குறித்த அடையாளம் உள்ளிட்ட தகவல்களை வழங்க மத்திய அரசு ஒரு தன்னார்வ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, டிரோன் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அதன் இயக்குபவர்கள் குறித்த தனிநபர் விவரங்களை தாங்களாகவே முன்வந்து ஜனவரி 31-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  Digital Sky என்ற இணையவழியில் பதிவு செய்யப்படும்போது, ஆளில்லா விமானத்துக்கான அடையாள எண்ணும் (DAN), அதன் உரிமையாளருக்கான அடையாள எண்ணும் (OAN) வழங்கப்படும்.

எனினும், அடையாள எண்கள் மட்டும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான அனுமதியாகக் கருதப்படாது. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிமுறைகளையும் ஆளில்லா விமானங்கள் பின்பற்ற வேண்டும். ஆளில்லா விமானங்களைப் பதிவு செய்யத் தவறுபவா்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம், விமானப் போக்குவரத்து சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான டிரோன்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

DRONE, CIVIL, AVIATION, REGISTER