"எனக்காக கவலைப்பட வேண்டாம்"..டிவிட்டர் CEO போட்ட ட்வீட்.. என்னவா இருக்கும்?
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல சமூக வலைத் தளமான டிவிட்டரை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அந்த நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்துவரும் பராக் அகர்வால் போட்ட ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. மஸ்க் மார்க் வச்ச அடுத்த கம்பெனி.. பரபரப்பை கிளப்பிய ட்வீட்..
பராக் அகர்வால்
டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால். முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை மஸ்க் வாங்கியபோது அவரை நிர்வாக குழுவிற்கு வரவேற்பதாக அகர்வால் தெரிவித்திருந்தார். அதன்பிறகு டிவிட்டரை மஸ்க் முழுமையாக வாங்கிய பிறகு, அகர்வால் அதே பணியில் தொடர்வாரா என கேள்வி எழுந்தது.
இதனிடையே டிவிட்டர் ஊழியர் கூட்டத்தில் பராக் பேசுகையில்,"ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் உள்ளதால் அது எந்தத் திசையில் செல்லும் என எங்களுக்குத் தெரியாது" எனத் தெரிவித்தாக தகவல் வெளியானது.
இழப்பீடு தொகை
இந்த பரபரப்புக்கு மத்தியில் ட்விட்டர் நிர்வாகத்தில் அடுத்து என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று Equilar நிறுவனம் ஆரூடம் சொல்லியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் வைரலாகி வருகின்றன. அதில் டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஒருவேளை பதவிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு நிறுவனம் இழப்பீடாக 42 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய்) வழங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கவலைப்பட வேண்டாம்
இந்நிலையில், மைட்டி என்ற இணையதள ப்ரவுசர் ஒன்றின் நிறுவனரான சுஹைல் என்பவர் ட்விட்டரில், `பராக் அகர்வாலை நினைக்கையில் சற்று வருத்தமாக உள்ளது. ட்விட்டருக்காக அவர் எல்லா திட்டங்களையும் வகுத்திருந்தார். இப்போது அவரது முழு குழுவின் அதே நிச்சயமற்ற தன்மையுடன் வாழ்கிறார்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த அகர்வால்,"உங்களுக்கு நன்றி. ஆனால் எனக்காக நீங்கள் வருந்தவேண்டாம். ஏனெனில் இறுதியில் மிக முக்கியமானது ட்விட்டர் சேவையை மேம்படுத்துவோர்தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் CEO வாக அகர்வால் நீடிப்பாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் அகர்வால் போட்ட இந்த ட்வீட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்