'டிஜிட்டல் வாலட் யூஸ் பண்றவங்களோட...' பெர்ஸனல் விவரங்கள் எல்லாமே 'டார்க் வெப்'ல லீக் ஆயிடுச்சு...! வெளியான 'அதிர' வைக்கும் தகவல்...! - விளக்கம் அளித்த நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்டிஜிட்டல் வாலட்டில் பணப் பரிவர்த்தனை செய்யும் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை அடிப்படையாக கொண்ட நிறுவனம் பணப் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட செயலிதான் மொபிக்விக் (mobikwik). இது டிஜிட்டல் வாலட் (digital wallet) முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
தற்போது சுதந்திரமான இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் சிலர், இந்த மொபிக்விக் (mobikwik) செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்கள், டார்க் வெப்பில் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு முன்னரே ராஜ்ஷேகர் ராஜஹாரியா என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், மொபிக்விக் நிறுவனம் சுமார் 11 கோடி இந்தியர்களின் தொலைப்பேசி எண், வங்கிக் கணக்கு,ஆதார் அட்டை தரவுகள், கடவுச்சொற்கள் மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள் கசிந்து விட்டதாகக் கூறினார். அப்போது அதில் ஒரு சிலரே கவனம் செலுத்திய நிலையில் தற்போது மேலும் சில இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், 35 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அடங்கிய டேட்டா-பேஸ் டார்க்-வெப்பில் வெளியாகி இருப்பதாகக் கூறினர்.
இந்த நிகழ்வு மட்டும் உண்மையென்றால், உலகின் மிகப்பெரிய வாடிக்கையாளர் விவரங்கள் கசிந்த நிகழ்வாக இது இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள சூழலில் மொபிக்விக் நிறுவனம், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'நாங்கள் வாடிக்கைக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததுள்ளாத என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். எங்களுடைய நிர்வாகத்தில் எந்தப் பாதுகாப்பு குறைபாடும் கண்டுபிடிக்கப்படவில்லை. பயனர்கள் மற்றும் எங்கள் நிறுவனத்தின் தகவல்கள் பாதுகாப்பானது மற்றும் பத்திரமானது' எனத் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்று கூறலாம்
மற்ற செய்திகள்