'இந்த அறிவிப்பால நம்பிக்கையே போய்டுச்சு...' இனிமேல் அந்த நாட்டுல வேலை கெடைக்குறது ரிஸ்க் தான்...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு...!
முகப்பு > செய்திகள் > வணிகம்முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இருக்கும் சிங்கப்பூரில் இனி வேலை கிடைக்க திண்டாட்டமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தீவு நாடக இருந்தாலும் ஆசிய அளவில் பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இருக்கும் சிங்கப்பூர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினருக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குகியது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூரின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருவதால் வெளிநாட்டினரின் வேலை வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டவரின் பங்கை குறைக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது, S Pass Quota கீழ் உற்பத்தி துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் 20% இடங்களில் இருந்து தற்போது 15% குறைக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
S Pass மூலம் வேலைபெற்ற தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது 2500 டாலராவது ஊதியமாக வழங்க வேண்டிய நிலை இருப்பதால் அதன் விழுக்காட்டை குறைத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக இந்த கோட்டாவில் டிகிரி, டிப்ளமா படித்தவர்கள் அதிகம் வேலை பெறும் நிலையில் இந்த அறிவிப்பு அனைவரின் வேலைவாய்ப்பினையும் கேள்விக்குறியாக்கியுள்ளது எனலாம்.
இந்த சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என சிங்கப்பூர் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாது 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 15 விழுக்காடாக குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்