Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

ஊழியர்களுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் கொடுத்த CEO-ன் திடீர் அறிவிப்பு.. கலங்கிப்போன பணியாளர்கள்.. என்ன ஆச்சு.?

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

தனது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 63 லட்ச ரூபாய் ஊதியமாக அளித்துவந்த அமெரிக்காவை சேர்ந்த டான் ப்ரைஸ் என்னும் தொழிலதிபர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஊழியர்களுக்கு ரூ.63 லட்சம் சம்பளம் கொடுத்த CEO-ன் திடீர் அறிவிப்பு.. கலங்கிப்போன பணியாளர்கள்.. என்ன ஆச்சு.?

Also Read | "என்னோட காஸ்ட்லி BAG-ல என்ன பண்ணிருக்காருன்னு பாருங்க".. முன்னாள் காதலன் மீது வழக்கு போட்ட இளம்பெண்.. பரபரப்பான நீதிமன்றம்..!

டான் ப்ரைஸ்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த டான் ப்ரைஸ் கிராவிட்டி பேமெண்ட்ஸ் (Gravity Payments) என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய மூத்த சகோதரரான லூகாஸ் என்பவருடன் இணைந்து இந்நிறுவனத்தை துவங்கினார். இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். இதனாலேயே பல லட்சக்கணக்கான மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, எப்போதும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு நெட்டிசன்களை திகைக்க வைப்பது இவருடைய வாடிக்கை. இதனிடையே தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு இணைய வெளிகளில் பேசுபொருளாகியுள்ளது.

Dan Price resigns as CEO of payments firm Amid Misconduct Charges

ராஜினாமா

இந்நிலையில், கிராவிட்டி பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் CEO பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார் ப்ரைஸ். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்," 18 வருடங்களுக்கு முன்னர் நான் துவங்கிய கிராவிட்டி பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகுகிறேன். நிறுவனத்தில் நீண்ட காலமாக மூத்த அதிகாரியாக இருக்கும் டாம்மி க்ரோல் இனி CEO வாக செயல்படுவார். எங்கள் ஊழியர்கள் உலகின் சிறந்த நிறுவனத்தில் பணியாற்றுவதே எனது நம்பர் 1 முன்னுரிமையாக இருந்தது. ஆனால் எனது இருப்பு கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. நான் இதிலிருந்து விலகி என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராட போகிறேன். நான் எங்கும் செல்லப்போவதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Dan Price resigns as CEO of payments firm Amid Misconduct Charges

முன்னதாக டான் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 80,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 63 லட்ச ரூபாய்) வழங்கிவருவதாக தெரிவித்திருந்தார். மேலும், பிற நிறுவனங்களும் இதேபோல ஊழியர்களுக்கு நியாயமான முறையில் ஊதியத்தை வழங்க முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை  விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | கேமராவில் சிக்கிய அரியவகை வெள்ளை மான்.. மீண்டும் வைரலாகும் வீடியோ.. ஆய்வாளர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்.!

DAN PRICE, DAN PRICE RESIGNS AS CEO, GRAVITY PAYMENTS CEO, GRAVITY PAYMENTS CEO DAN PRICE RESIGNS

மற்ற செய்திகள்